Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

சிமோனாவிடம் வீழ்ந்தார் பிரான்ஸ் புயல்...!



மியாமி டென்னிஸ் போட்­டியின் இரண்­டா­வது சுற்றில் சிமோனா ஹலெப்­புடன் மோதிய பிரான்ஸ் வீராங்­கனை டுடின் தோல்­வி­கண்டார்.

இப் போட்­டியில் வெற்­றி­பெற்ற சிமோனா 3ஆ-வது சுற்­றுக்கு தகுதி பெற்றார்.

மியாமி டென்னிஸ் போட்டி அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாகா­ணத்தில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதன் பெண்கள் ஒற்­றையர் பிரிவு இரண்­டா­வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோமே­னிய வீராங்­கனை சிமோனா ஹலெப்பை பிரான்ஸ் வீரா­ங்கனை டுடின் எதிர்­கொண்டார். 

இப் போட்­டியில் 3-–6, 6–-3, 7–-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்­கனை டுடின்னை வீழ்த்தி 3ஆ-வது சுற்­றுக்கு சிமோனா தகுதி பெற்றார்.

மற்­றொரு பெண்­க­ளுக்­கான ஒற்­றையர் பிரிவில் அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ், ஜப்பான் வீராங்­கனை நவோமி ஒசா­காவை எதிர்­கொண்டார்.

இதில் செரீனா வில்­லியம்ஸ் 3–-6, 2–-6 என்ற நேர்செட் கணக்கில் தோல்­வி­ய­டைந்து முதல் சுற்­றோடு வெளி­யே­றினார். கடந்த வாரம் நடை­பெற்ற இண்­டியன் வெல்ஸ் தொடரில் 3ஆ-வது சுற்றுவரை இவர் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »