Our Feeds

Saturday, March 24, 2018

Tamilosai

பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் "BFF" என்று டைப் செய்து பார்க்க வேண்டாம்.! ஏன்.? எதனால்.?


பேஸ்புக்கில் 'ஃபேக் நியூஸ்' எனப்படும் போலி செய்திகள் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்துமென்பதை நாம் நன்றாக அறிவோம். ஒரு உண்மையை நூறு பேர் பொய் என்று கூறினால் அது பொய் ஆவதும், ஒரு பொய்யை உண்மையென்று ஒருத்தன் பேஸ்புக்கில் கூறினாலும் கூட அது உண்மையாவதும் இக்காலத்தில் தான்.


அப்படியானதொரு பொய், உண்மையான சம்பவம் கடந்த 2 தினங்களாக பேஸ்புக்கில் அரங்கேறி வருகிறது. அதாவது, பெரும்பாலான பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பில்லாத நிலைப்பாட்டில் உள்ளதாகவும் வெளியான தகவலையடுத்து - பிஎப்எப் (BFF) எனும் புரளி கிளம்பியது.

என்னடா இது புதுசா இருக்கே.! கடந்த இரு தினங்களாக பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பிஎப்எப் என்ற மூன்று எழுத்தை (ஆங்காங்கே) பெருமளவில் காணப்பட்டது. என்னடா இது புதுசா இருக்கே என்ற வியப்பில் விசாரித்து பார்த்ததில் ஒரே சிரிப்பா போச்சு!

ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? பேஸ்புக் ஹேக் சம்பவத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் சிஇஓ ஆன மார்க் சூக்கர்பெர்க், பிஎப்எப் எனும் வார்த்தையை உருவாக்கியுள்ளதாகவும், அந்த குறிப்பிட்ட வார்த்தையை பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பதிவிடுவதின் மூலம் உங்களின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? என்பதை கண்டறிய முடியுமென்றும் ஒரு பேஸ்புக் போஸ்ட் வெளியானது.



பச்சை நிறமாக மாறுகிறதா.? அல்லது கருப்பு நிறமாக மாறுகிறதா.? இதுவொரு பூதாகரமான வதந்தியாக உருவாகி, பிரபலமான பேஸ்புக் பக்கங்களின் வழியாக பரவ ஆரம்பித்தது. கமெண்ட் பிரிவில் டைப் செய்யப்படும் "பிஎப்எப்" (BFF) எனும் வார்த்தை பச்சை நிறமாக மாறுகிறதா.? அல்லது கருப்பு நிறமாக மாறுகிறதா என்பதை காண பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்கள் இதை முயற்சி செய்ய ஆரம்பித்தன, அவர்களில் இந்திய பயனர்களும் அடக்கம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »