Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

மேவெதரின் சாதனையை நெருங்கும் தாய்லாந்தின் வான்ஹெங்...!



ஒருவர் தொடர்ச்­சி­யாக எத்­தனை முறை வெல்­லலாம்? ஐந்து முறை? பத்து முறை? இரு­பது முறை? ஐம்­பது முறை தோல்­வியே காணாமல் குத்­துச்­சண்டை போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக வென்ற சாத­னைக்­கு­ரி­யவர் ஃப்ளாய்ட் மேவெதர். 

இந்த அரிய சாத­னையை சமன் செய்ய சத்­தமே இல்­லாமல் தயா­ராகி வரு­கின்றார் தாய்­லாந்தைச் சேர்ந்த வான்ஹெங் மேன­யோதின்.

குத்­துச்­சண்டை வீரர் என்­ற­வுடன் நம் நினை­வுக்கு வரும் உருவம் எப்­படியிருக்கும்? நல்ல உயரம், அச்­சு­றுத்தும் உடற்­கட்டு. மிகுந்த ஆக்­ரோ­ஷத்­துடன் தாக்கும் கைகள். எதி­ரா­ளியைத் தாக்கி அழிக்கும் ஆகி­ருதி கொண்ட ஓர் ஆறு அடி உயர விளை­யாட்டு வீரர்­தானே நம் நினை­வுக்கு வருவார்? 

அது மட்­டு­மல்­லாமல் குத்­துச்­சண்டை வீரரின் உய­ரமும் மிக முக்­கியம். எதி­ரா­ளியைத் தாக்கி அடிக்­கும்­போது உங்­க­ளு­டைய கைகள் எந்த அள­வுக்கு நீண்டு தாக்க முடி­கின்­றதோ, அந்த அள­வுக்குக் குத்­துச்­சண்­டையில் நீங்கள் எளி­தாக யுக்­திகள் அமைத்து வெற்றி பெறவும் முடியும். ஆனால், பெரி­தாக உய­ரமும் இல்­லாமல் உடல் எடையும் இல்­லாமல் ஒருவர் 49 முறை தொடர்ச்­சி­யாகக் குத்­துச்­சண்டைப் போட்­டிகளில் வெற்றி பெற்­றி­ருக்­கிறார் என்றால் நம்ப முடி­கி­றதா? 

இவ­ரது இயற்­பெயர் சாயபோன் மூன்ஸ்ரி. தாய்­லாந்தின் மிக ஏழ்­மை­யான பகு­தி­யி­லி­ருந்து வந்த இவர் தேர்ந்­தெ­டுத்த விளை­யாட்டு மினிமம் வெயிட் பொக்ஸிங். 

1968 ஆ-ம் ஆண்டு நடை­பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்­டி­களின் போது 48 கிலோ எடைப்­பி­ரி­வாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது மினிமம் வெயிட் பொக்ஸிங். இதில் இன்று தவிர்க்­க­மு­டி­யாத போட்­டி­யா­ள­ராக வளர்ந்­தி­ருக்­கிறார் வான்ஹெங்.

47 கிலோ எடையும் 157 செ.மீ. உய­ரமும் மட்­டுமே கொண்ட வான்ஹெங் செல்­ல­மாக ‘dwarf giant’ என்றழைக்­கப்­ப­டு­கின்றார். 

தன்­னு­டைய 22 வயதில் முதன்­மு­த­லாக பிலிப் பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோயல் கேட்­டிற்கு எதி­ராகக் கள­மி­றங்­கிய போட்­டி­ முதல், கடந்தாண்டு நவம்பர் மாதம் ஜப்பாைனச் சேர்ந்த தட்­சூயா ஃபுகு­ஹு­ரா­விற்கு எதி­ராகப் போட்­டி­யிட்ட 49 போட்­டி­க­ளிலும் வான்­ஹெங்­கிற்குக் கிடைத்­தவை எல்லாம் வெற்றி... வெற்றி... வெற்றி! 

இந்த 49 போட்­டி­களில் 'நொக்- அவுட்' முறையில் வெற்றி பெற்ற போட்­டிகள் மொத்தம் பதி­னேழு.

இதன்­மூ­ல­ம் அவர் பிர­பல குத்­துச்­சண்டை வீரர் ரோக்கி மார்­சி­யா­நோவின் சாத­னையைச் சமன் செய்­துள்ளார். அவர் மீண்டும் கலந்­து­கொள்ளும் போட்­டி­யிலும் வெற்றி பெற்றால் அமெ­ரிக்கக் குத்­துச்­சண்டை வீரர் ஃப்ளாய்ட் மேவெ­தரின் சாத­னை­யையும் முறி­ய­டித்து விடுவார். 

ஃப்ளாய்ட், தான் பங்­கேற்ற 50 போட்­டி­க­ளிலும் வெற்றி பெற்­றவர். இதில் அவர் 'நொக் -அவுட்' மூல­ம் பெற்ற வெற்­றிகள் மட்டும் 27. 

இவ்­வ­ளவு சாத­னைகள் புரிந்த மேெவதரின் சாத­னையை இந்த தாய்­லாந்துச் சிங்கம் சமன் செய்­யுமா என்று அவ­ரிடம் கேட்டால், நிதா­ன­மாகப் பதில் வரு­கின்­றது.

“சாத­னைகளை முறி­ய­டிப்­பது குறித்து நான் யோசிக்­க­வில்லை. மற்ற விளை­யாட்டு வீரர்­களைப் போலவே நான் ஒவ்வொரு போட்டியிலும் போராடி வெற்றி பெறவேண்டும். 

தோல்வியை நான் விரும்புவ 

தில்லை. என் உழைப்பின் மூல மாக நான் ஒய்வு பெறும்வரை வெற்றிபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறான் இந்த மாவீரன் நம்பிக்கையோடு.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »