Our Feeds

Saturday, March 24, 2018

Tamilosai

மாடுகளுக்கும் பேசியல் ஸ்கேன்...!



மாடுகளைக் கண்டறிவதற்காக பேசியல் ஸ்கேன்(facial scan) வசதியை அயர்லாந்து நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

மாடுகளின் முகத்தை பல்வேறு கோணங்களில் பதிவிட்டு அதனைச் சரியே கணித்து அந்த மாட்டின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவே,கெயின்துஸ்(Cainthus) என்ற நிறுவனத்தினால், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ள நபர்களுக்கு, ஒரு மாடு எவ்வளவு உணவினை உட்கொள்கிறது, அதன் உடல்நிலை எவ்வாறு உள்ளது, என்பது போன்ற தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள, இந்த பேசியல் ஸ்கேன் வசதி பயன்படும்.

குற்றவாளிகளின் முகத்தில் அங்க அடையாளங்களை பேசியல் ஸ்கேன் மூலம் சேமித்து வைத்துக் கொண்டு, உலகில் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை கண்டறியும் வசதி இதனால் உபயோகப்படுத்தப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் பயனர்கள் பேசியல் ஸ்கேன் வசதி கொண்டு அவர்களது மொபைல்கள் அன்லாக் செய்து கொள்ளும் வசதியும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாகவே, மாடுகளுக்கும் இந்த பேசியல் ஸ்கேன் வசதியை மேற்படி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »