Our Feeds

Sunday, April 1, 2018

Tamilosai

எளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

ர்ப்ப காலத்தில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அந்த வகையில், கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறைகளைச் சொல்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

நட்ஸ் அவசியம்! 

 பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகள், உலர்திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இவற்றில் அதிக அளவில் புரோட்டீன், மினரல் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

பூண்டு மற்றும் மஞ்சள்தூளைத் தவிர்க்காதீர்! 

 உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன்கொண்டது, பூண்டு. இதில் உள்ள அலிசின் (Allicin), கிருமித்தொற்றால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவும். மஞ்சள்தூளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் தன்மைகள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே, தினசரி உணவில் இவற்றைப் பயன்படுத்துவது தாய் - சேய் நலம் காக்கும். 

ஹைட்ரேஷன் வேண்டும்! 

 கர்ப்பமாக இருக்கும்போது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். எனவே, நீர்ச்சத்து அதிகம் இருக்கும் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

 மஞ்சள், பச்சை நிறக் காய்களை அதிக அளவில் உணவில் பயன்படுத்த வேண்டும். எலும்புகள் உறுதியாக இருக்க உதவும் சூரிய ஒளி, பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களிலிருந்து வைட்டமின் டி  கிடைக்கிறது. பால், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி அதிகமுள்ள மீன், காளான் போன்றவற்றை உண்ணலாம். கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

நித்யஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்

வெஜிடபிள்ஸ் தேவை! 

 மஞ்சள், பச்சை நிறக் காய்களை அதிக அளவில் உணவில் பயன்படுத்த வேண்டும். எலும்புகள் உறுதியாக இருக்க உதவும் சூரிய ஒளி, பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களிலிருந்து வைட்டமின் டி  கிடைக்கிறது. பால், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி அதிகமுள்ள மீன், காளான் போன்றவற்றை உண்ணலாம். கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம்! 

 குழந்தைக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதிகமாக உடற்பயிற்சி செய்யமுடியவில்லை என்றாலும், காலையும் மாலையும் மிதமான  நடைப்பயிற்சி மேற்கொள்வது பலன் தரும்.

ஆழ்ந்த உறக்கம் நலம்! 

 இரவில் ஆழ்ந்து உறங்குவது தாய்க்கு மட்டுமன்றி, குழந்தைக்கும் அதிக நன்மையைத் தரும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

- வெ.வித்யா காயத்ரி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »