Our Feeds

Sunday, April 1, 2018

Tamilosai

இலங்கையில் அமுலாகிறது உள்நாட்டு இறைவரி புதிய சட்டம்!


இலங்கையின் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் (New Inland Revenue Act) இன்று முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சட்டமானது, வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது என்றும் இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்த அவர், இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும், அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீப காலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரிமூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது என்றும் நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
”தற்பொழுது 80சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும். 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »