Our Feeds

Saturday, March 24, 2018

Tamilosai

தகுதி சம்­பி­யனைத் தீர்­மா­னிக்கும் போட்டி இன்று...!



உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­திகாண் போட்­டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் முத­லிரு இடங்­களைப் பிடித்த மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அணிகள் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­தியை பெற்­றுக்­கொண்­டன. ஸிம்­பாப்வே மற்றும் ஸ்கொட்­லாந்து அணிகள் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக உலகக் கிண்­ணத்­துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்­தன.

10 நாடுகள் பங்­கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­திகாண் போட்­டிகள் ஸிம்­பாப்­வேயில் நடை­பெற்று வரு­கின்­றன. ஒரு குழுவில் தலா 5 அணிகள் வீத­மாக ஏ,பீ என இரு குழுக்­களும் லீக் சுற்றில் பங்­கேற்­றன. இதில், இரு குழுக்­க­ளி­லி­ருந்தும் முதல் 3 இடங்­களை பெறும் அணிகள் இரண்­டா­வது சுற்­றான சுப்பர் சிக்ஸ் சுற்­றுக்கு முன்­னேறும்.

இதன்­படி மேற்­கிந்­தி­யத்

தீ­வுகள், அயர்­லாந்து, ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகி­யன ஏ குழு­வி­லி­ருந்தும் ஸிம்­பாப்வே, ஸ்கொட்­லாந்து, ஆப்­கா­னிஸ்தான் பீ குழு­வி­லி­ருந்தும் சுப்பர் சிக்ஸ் சுற்­றுக்கு முன்­னே­றின.

ஸிம்­பாப்வே, ஸ்கொட்­லாந்து பரி­தாபம்

மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான போட்­டியில் வெற்றி பெறக்­கூ­டிய நிலையில் ஸ்கொட்­லாந்து காணப்­பட்­டாலும் டக்வேர்த் லூயிஸ் விதி­மு­றைப்­படி அப்­போட்­டியில் 5 ஓட்­டங்­களால் ஸ்கொட்­லாந்து அணி தோல்­வி­ய­டைந்து வெளி­யே­றி­யது. 

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­ட­னான போட்­டியில் சொந்த மண்ணில் விளை­யாடி ஸிம்­பாப்வே வெற்றி பெற்று உலகக் கிண்­ணத்­துக்கு தகுதி பெறும் என பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும், அவ்­வ­ணி­யுடன் அதிர்ச்­சி­க­ர­மான தோல்­வி­ய­டைந்­தது. 

சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­திய ஆப்கான்

இந்தத் தோல்­வி­க­ளுக்­காக காத்­தி­ருந்த அயர்­லாந்து, ஆப்­கா­னிஸ்தான் அணிகள் கடந்த வெள்­ளி­யன்று சந்­தித்­தன. இதில் பங்­கேற்­ற இரு அணி­களும் வெற்­றிக்­காக கடு­மை­யாக விளை­யா­டி­யி­ருந்­தன. இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து அணி 207 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்கான் கடு­மை­யான போராட்­டத்தின் மத்­தியில் 49.1 ஓவர்­களில் வெற்றி இலக்கை அடைந்து 5 விக்­கெட்­டு­களால் வெற்­றி­யீட்டி உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »