Our Feeds
Showing posts with label Bussiness. Show all posts
Showing posts with label Bussiness. Show all posts

Saturday, March 24, 2018

jazeem

பொலன்னறுவை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்பம்...!



பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயி ஒருவரிடமிருந்து 2000 கிலோ நெல் கொள்வனவு செய்யப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இம்முறை 15,000 தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் 18 கொள்வனவு மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
jazeem

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை...!



தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் ​தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் கூறியுள்ளார்.
jazeem

உளுந்து மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்...!



ஒரு கிலோகிராம் உளுந்தின் மீது 50 ரூபா இறக்குமதி வரியை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு உளுந்து செய்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு தொடர்பிலான குழு நேற்று (20) கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் உளுந்திற்கு 100 ரூபா வரி அறவிடப்படுகின்றது.

புதிய வரி திருத்தத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோகிராம் உளுந்தின் மீது 150 ரூபா வரி விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
jazeem

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு...!



வௌிநாட்டு பணப்பெறுமதிக்கு அமைய நாட்டின் நாணயப்பெறுமதி குறைவடைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் வாகனங்களின் விலை 5 வீதமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறியுள்ளார்.

சாதாரண வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.