Our Feeds
Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Saturday, March 24, 2018

Tamilosai

அஜித் விஜய்யை முறியடித்த மகேஷ்பாபு..!



யூ-டியூபில் வெளியாகும் திரைப்பட டீசர்களில் தமிழ்த் திரைப்படங்கள்தான் இதுவரையிலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றன. 

ஆனால், சமீபகாலமாக தெலுங்குத் திரைப்படங்களும் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன. இந்தியப் படங்களின் டீசர்களில் இதுவரையில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக விஜய் நடித்த 'மெர்சல்' டீசர்தான் இருக்கிறது. 

இந்தப் படம் 10 லட்சம் லைக்குகளைப் பெற்று உலக சாதனையுடன் முதலிடத்தில் இருக்கிறது.
jazeem

பெண்ணாக மாறிய அனிருத்...!



முன்னணி இசையமைப்பாளரான அனிருத் பெண்ணாக வேடமிட்டு வௌியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்துள்ளார்.

அனிருத் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். இதன்போது, பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

யார் இந்த பெண் என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால் தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.
jazeem

ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித்...!



நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24 ஆம் திகதி துபாயில் காலமானார். இதனால் அவர் நடித்து வந்த படத்தின் பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீதேவி நடித்து வந்த கதாப்பாத்திரத்தில் நடித்து, திரைப்படத்தை முடித்துக்கொடுக்க நடிகை மாதுரி தீட்சித் முன்வந்துள்ளார்.

தன் தாய் பங்கேற்ற கதாப்பாத்திரத்தை நிறைவு செய்து தர முன்வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, மாதுரி தீட்சித்திற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அபிஷேக் வர்மா தற்போது இயக்கிவரும் படம் என் அம்மாவின் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த அழகான படத்தில் மாதுரிஜி பங்கேற்றுள்ளதற்காக அப்பா, குஷி, நான் ஆகிய மூவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

என்று தெரிவித்துள்ளார்.
jazeem

ரஹ்மானுடன் இணையும் மிஷ்கின்...



ஓஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானுடன் முதன்முறையாக இணைகிறார் இயக்குநர் மிஷ்கின்.

இசையுலகைப் பொருத்தவரை ஓஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு உலகளாவிய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வருகிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62 ’, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்க சிவந்த வானம், ராஜுவ் மேனன் இயக்கத்தில் தயாராகும் சர்வம் தாள மயம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் திரையுலகில் சித்திரம் பேசுதடி படத்திலிருந்து அண்மையில் இவரின் நடிப்பில் உருவான சவரக்கத்தி வரை ஒரே பாணியிலான திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு கோணத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குநர் மிஷ்கின்.

இசைஞானம் மிக்க இவர் இசைஞானி இளையராஜா, இளம் இசையமைப்பாளர் ஆரோல் கொரேலி ஆகியோரைக் கடந்து முதன்முறையாக ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறார். இதனாலேயே இப்படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

மிஷ்கின் இயக்கவிருக்கும் இந்த படத்தில் சாந்தனு, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
jazeem

வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் பயமில்லை: ஆண்ட்ரியா...!



வட சென்னை படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் தற்போது பயமில்லை என்று கூறியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா வட சென்னை பெண்ணாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பற்றி கூறிய ஆண்ட்ரியா….


முகத்தோற்றம், கால்ஷீட் திகதி பார்த்து இயக்குனர்கள் நடிகைகளைத் தெரிவு செய்வார்கள். ஆனால், வெற்றிமாறன் மிகவும் வித்தியாசமானவர். நடிகர், நடிகைகளை அவர் தெரிவு செய்யும் விதமே தனி.

தனது கதாபாத்திரங்களின் குணாதிசயம் யாரிடம் உள்ளது என்று பார்ப்பார். அதைக் கண்டுபிடித்துவிட்டால் அவர்களை தனது படத்தில் நடிக்க வைப்பார். தோற்றம் எல்லாம் அதற்கு பிறகுதான்.

வெற்றிமாறன் போல பெரும்பாலான இயக்குனர்கள் நடிகர், நடிகைகளைத் தெரிவு செய்வது இல்லை. பல நேரம் செட்டில் என்ன நடக்கிறது என்பதே எனக்கு புரியாது. ஆனால், என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஒரு கலைஞராக அவரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டும்.

வட சென்னை’ படத்தில் எப்படி நடிக்கப்போகிறேனோ என்று முதலில் பயந்தேன். வெற்றிமாறனை முழுமையாக நம்பியதால் இப்போது அந்த பயம் இல்லை என தெரிவித்துள்ளார்.