Our Feeds
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Sunday, April 1, 2018

Tamilosai

வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்.



கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க அறிக்கைகள் கூறுகின்றன.

வளிமண்டலத்தில் திங்கட்கிழமை அன்று ஜி.எம்.டி நேரப்படி 00:15 மணிக்கு இது நுழைந்தது என சீனாவின் மனித விண்வெளி பொறியியல் அலுவலகம் கூறுகின்றன.
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
வரும் 2022இல் மனிதர்களைக்கொண்ட விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவும் சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 விண்கலம் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏவப்பட்ட அந்த விண்வெளி நிலையம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது பணிகளை முடித்துக்கொண்டது.
தியன்கொங்-1 தங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அதை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் 2016ஆம் ஆண்டு சீனா உறுதிப்படுத்தி இருந்தது.
தியன்கொங்-1 மீண்டும் திரும்புவதை உறுதி செய்ய சுற்றுப்பாதை பகுப்பாய்வு (Orbit analysis) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பூமயின் எந்தப் பகுதியில் அது விழும் என்பதை கணிக்க பெரிதும் போராடினர். சா பாலோ அல்லது பிரேசிலில் விண்வெளி நிலையம் விழும் என முதலில் சீனா தவறாக கூறியது.


தியன்கொங்-1படத்தின் காப்புரிமைAFP
Image caption2011ஆம் ஆண்டு தியன்கொங்-1 ஏவப்பட்ட போது

உடைந்த பாகங்கள் பெரும்பாலும் நீரில் விழும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்திருந்தது.
அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் மண்ணை அடையும் முன்னரே எரிந்துவிடும் என்றும், அதன் மிகச் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல அந்த விண்வெளி நிலையம் அதிகமான விசையுடன் பூமியில் நுழையாது என்றும், விண் கற்களின் வண்ணமிகு தூரல் போலவே அது வளி மண்டலத்துக்குள் நுழையும் என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Saturday, March 24, 2018

Tamilosai

பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் "BFF" என்று டைப் செய்து பார்க்க வேண்டாம்.! ஏன்.? எதனால்.?


பேஸ்புக்கில் 'ஃபேக் நியூஸ்' எனப்படும் போலி செய்திகள் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்துமென்பதை நாம் நன்றாக அறிவோம். ஒரு உண்மையை நூறு பேர் பொய் என்று கூறினால் அது பொய் ஆவதும், ஒரு பொய்யை உண்மையென்று ஒருத்தன் பேஸ்புக்கில் கூறினாலும் கூட அது உண்மையாவதும் இக்காலத்தில் தான்.


அப்படியானதொரு பொய், உண்மையான சம்பவம் கடந்த 2 தினங்களாக பேஸ்புக்கில் அரங்கேறி வருகிறது. அதாவது, பெரும்பாலான பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பில்லாத நிலைப்பாட்டில் உள்ளதாகவும் வெளியான தகவலையடுத்து - பிஎப்எப் (BFF) எனும் புரளி கிளம்பியது.

என்னடா இது புதுசா இருக்கே.! கடந்த இரு தினங்களாக பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பிஎப்எப் என்ற மூன்று எழுத்தை (ஆங்காங்கே) பெருமளவில் காணப்பட்டது. என்னடா இது புதுசா இருக்கே என்ற வியப்பில் விசாரித்து பார்த்ததில் ஒரே சிரிப்பா போச்சு!

ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? பேஸ்புக் ஹேக் சம்பவத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் சிஇஓ ஆன மார்க் சூக்கர்பெர்க், பிஎப்எப் எனும் வார்த்தையை உருவாக்கியுள்ளதாகவும், அந்த குறிப்பிட்ட வார்த்தையை பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பதிவிடுவதின் மூலம் உங்களின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? என்பதை கண்டறிய முடியுமென்றும் ஒரு பேஸ்புக் போஸ்ட் வெளியானது.



பச்சை நிறமாக மாறுகிறதா.? அல்லது கருப்பு நிறமாக மாறுகிறதா.? இதுவொரு பூதாகரமான வதந்தியாக உருவாகி, பிரபலமான பேஸ்புக் பக்கங்களின் வழியாக பரவ ஆரம்பித்தது. கமெண்ட் பிரிவில் டைப் செய்யப்படும் "பிஎப்எப்" (BFF) எனும் வார்த்தை பச்சை நிறமாக மாறுகிறதா.? அல்லது கருப்பு நிறமாக மாறுகிறதா என்பதை காண பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்கள் இதை முயற்சி செய்ய ஆரம்பித்தன, அவர்களில் இந்திய பயனர்களும் அடக்கம்.
Tamilosai

வாட்ஸ்ஆப் : பணம் அனுப்ப இனி க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்.!



இறுதியாக, வாட்ஸ்ஆப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம் சோதனை பகுதியை (வாட்ஸ்ஆப் பீட்டா) வந்து அடைந்துள்ளது. அடுத்தது மிக விரைவில் அனைவருக்கும் உருட்டப்பட்டாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. 

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ஒரு புதிய மேம்படுத்தல் காணப்பட்டுள்ளது. அது ஒரு வாட்ஸ்ஆப் பயனரை, க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேனிங் செய்வதின் வழியாக பண பரிமாற்றத்தை நிகழ்த்த அனுமதிக்கிறது. அதாவது இனி வெறுமனே க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதின் வழியாக வாட்ஸ்ஆப் பேமெண்ட்களை நிகழ்த்தலாம் என்று அர்த்தம். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் (WhatsApp Payment) சேவையின் வழித்தடத்தின் வழியாக தான் கிடைக்கும் என்பதும், இந்த புதிய அம்சமானது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.18.93-ல் மட்டுமே அணுக கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோரின் படி, இந்த வாட்ஸ்ஆப் பீட்டா அப்டேட் ஆனது நேற்று தான் வெளியிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய வாட்ஸ்ஆப்பில், செட்டிங்ஸ் -> பேமெண்ட்ஸ் -> நியூ பேமண்ட் விருப்பத்தில் உள்நுழைய, அங்கு இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். ஒன்று யூபிஐ ஐடி, மற்றொன்று ஸ்கேன் க்யூஆர் கோட். அதில் இரண்டாவது விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் அதாவது க்யூஆர் குறியீட்டை ஸ்கேனிங் செய்யும் விருப்பம்.


பின்னர் ஸ்கேனிங்கை நிகழ்த்த, யூபிஐ பின் (UPI PIN) சரிபார்ப்பு நிகழ்த்தப்படும். அதனை தொடர்ந்து தொகை சார்ந்த விவரங்களை உள்ளிடும்படி கேட்கப்படும். பின்னர் பணபரிமாற்றத்தை நிகழ்த்திக் கொள்ளவேண்டியது தான்.
Tamilosai

மாடுகளுக்கும் பேசியல் ஸ்கேன்...!



மாடுகளைக் கண்டறிவதற்காக பேசியல் ஸ்கேன்(facial scan) வசதியை அயர்லாந்து நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

மாடுகளின் முகத்தை பல்வேறு கோணங்களில் பதிவிட்டு அதனைச் சரியே கணித்து அந்த மாட்டின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவே,கெயின்துஸ்(Cainthus) என்ற நிறுவனத்தினால், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாட்டுப்பண்ணை வைத்துள்ள நபர்களுக்கு, ஒரு மாடு எவ்வளவு உணவினை உட்கொள்கிறது, அதன் உடல்நிலை எவ்வாறு உள்ளது, என்பது போன்ற தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள, இந்த பேசியல் ஸ்கேன் வசதி பயன்படும்.

குற்றவாளிகளின் முகத்தில் அங்க அடையாளங்களை பேசியல் ஸ்கேன் மூலம் சேமித்து வைத்துக் கொண்டு, உலகில் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை கண்டறியும் வசதி இதனால் உபயோகப்படுத்தப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் பயனர்கள் பேசியல் ஸ்கேன் வசதி கொண்டு அவர்களது மொபைல்கள் அன்லாக் செய்து கொள்ளும் வசதியும் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாகவே, மாடுகளுக்கும் இந்த பேசியல் ஸ்கேன் வசதியை மேற்படி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jazeem

படர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..?



படர்தாமரை மற்றும் பூஞ்சைகாளானால் போன்றவைகளால் அரிப்பு ஏற்பட்டு கால் தொடைகளுக்கு இடையில் புண்கள் மற்றும் சொரிவதால் உண்டாகும் புண்கள் ஆகியவைகளால் அவதியா இதை படியுங்கள்.

இது தொற்று நோய் தான் ஆனால் சிலருக்கு தானாகவே தோன்றும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமே இந்த பூஞ்சைக்காளான் ஏற்படுகின்றது. ஈரமான உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளால் வியர்வை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும் போது தோல்கள் மென்மையாகிவிடும். இப்போது மீண்டும் மீண்டும் துணி உரசும்போது புண்கள்.

நாளடைவில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேர்ந்து பூஞ்சைக் காளானாக மாறிவிடுகின்றன. இவைதான் தொற்றுநோய் ஏற்படக்காரணம். ஒருவர் பயன்படுத்திய டாய்லட் மற்றும் சோப்புகளை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது. உள்ளாடைகளையும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தினாலும் இந்த பூஞ்சைக்கிருமிகள் தொற்று வரும். பெண்களின் நேப்கின்கள் மற்றும் உள்ளாடைகளை அடுத்தவருடன் பகிரக்கூடாது. இது தொற்று நோயை உண்டாக்கும்.

தினமும் குளித்து மறைவுப்பகுதிகள், காலிடுக்கு, இடுப்பு போன்றவற்றை நன்றாக தேய்த்து குளித்தாலே போதும். மேலும் நன்றாக காய்ந்த சுத்தமான உள்ளாடைகளை தினம் அணியவேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். பொது கழிவறைகள் சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது அதனால் கைகளை நன்றாக கழுவிவிட்டு தான் வரவேண்டும். வெஸ்டர்ன் வகை டாய்லட்கள் வேண்டாம்.

இந்த தொற்று நோய் பரவ நிறைய வாய்ப்புண்டு. பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் அதிகம் வரக்காரணம் இவர்களது உள்ளாடைகள் பெரும்பாலும் ”கட்” வகைகளில் இருப்பதால் தான், அதை தவிர்த்து டிரங்க் வகை உள்ளாடைகளை பயன்படுத்தவும்.

எவ்வளவு பாதுகாப்பாக இருந்தும் அரிப்பு நோய் வந்துவிட்டால் கவலை வேண்டாம் சுடுநீரில் சிறிது டெட்டால் போன்ற கிருமிநாசினியை கலந்து அதை அந்த மறைவுப்பகுதிகளில் பூச வேண்டும். இப்போது சிறிது எரிச்சல் ஏற்படும். ஆனால் புண்கள் ஆறிவிடும்.

வேலைமுடித்து இரவு வீட்டுக்கு சென்றதும் உள்ளாடை தவிர்த்து வேட்டி போன்ற காற்றோட்டமான காலாடைகளை அணியவும். இது இறுக்கத்தை தவிர்க்கும். இரவு தூங்குமுன்பு தேங்காய் எண்ணெயை தொட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்துவிடுங்கள் ஒரு வாரத்தில் புண்கள் ஆறிவிடும். கணவன் மனைவி இருவருக்கு யார் ஒருவருக்கு வந்தாலும் அடுத்தவர்க்கு தொற்றிக்கொள்ளும் அதனால் மேற்கண்டவற்றை பின்பற்றுங்கள்.

jazeem

நீரிழிவு நோயாளர்களின் மருத்துவ உபகரணங்களுக்கு நிர்ணய விலை...!



நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ உபகரணங்கள் பல்வேறு விலைகளில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றினூடாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீரிழிவு நோயாளர்களின் குருதியில் காணப்படும் சீனியின் அளவை சோதனை செய்வதற்கு பயன்படுத்தப்படும் குளுக்கோ மீற்றர் மற்றும் அதற்கான குளுக்கோ அளவீட்டு கருவி என்பன சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தனியார் வைத்தியசாலைகளில் இவற்றிற்கு பல்வேறு அளவில் பணம் அறவிடப்படுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணத்தால் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையுடன் கலந்துரையாடி இந்த உபகரணங்களுக்கான விலையை நிர்ணயிக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
jazeem

பேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி.?



பேஸ்புக் பயனர்கள் தகவல்கள் அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகாரமாய் வெடித்திருக்கும் நிலையில், உங்களை பற்றி பேஸ்புக் தெரிந்து வைத்திருப்பதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

பேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருட்டுத் தனமாக பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் தவறை ஒப்புக் கொண்டு, அடுத்தக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

டேட்டா வெளியான விவகாரம் பேஸ்புக் கணக்கை அழிக்க வைக்கும் அளவு #DeleteFacebook ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பேஸ்புக் கணக்கை அழிப்பது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம். எனினும் ஒவ்வொரு பயனர் குறித்து பேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் என்ன என்பதை நம்மால் சரிபார்க்க முடியும்.

இவற்றை இரண்டு அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். முதலில், உங்களுக்கு வழங்கப்படும் விளபம்ரங்களுக்காக பேஸ்புக் வைத்திருக்கும் தகவல்கள். இரண்டாவதாக நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோட் செய்த புகைப்படங்கள், அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் கிளிக் செய்தவை அடங்கும்.