Our Feeds
Powered by Blogger.

Tuesday, January 7, 2025

jazeem

ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சி!

 நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(07) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 289.72 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது இன்றையதினம் 291.32 ரூபாவாக சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், நேற்றையதினம் 298.41 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின்  விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.92 ரூபாவாக அதிகரித்துள்ளது

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.13 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 377 .21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி! ஒரே நாளில் பாரிய பின்னடைவு | Today Dollar Rate In Sri Lanka

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.65 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 313 .20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.80 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.17 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 189.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

Wednesday, December 27, 2023

jazeem

‘முடிந்தவரை முகக்கவசம் அணியுங்கள்’...!!

இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்பதீவா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயோஃபில்ம் மாதிரிகள் எடுக்கப்பட்டு இந்த நாட்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக நாட்டின் கொவிட் தொடர்பான உண்மைகளை விளக்கும் நிபுணர் வைத்தியர் ரோஹித முதுகல தெரிவித்திருந்தார்.

புதிய வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் இப்போது குளிர் எதிர்வினை போன்ற ஒரு சிறிய நோயின் வடிவத்தில் தோன்றுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொவிட் மரபணு பகுப்பாய்வின் இறுதி சோதனையில் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Monday, April 9, 2018

Tamilosai

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிப்பு...!

2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பாடசாலை விண்ணப்பதாரிகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கு இம்மாதம் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தில் நிலவும் தொழினுட்ப கோளாறு காரணமாக தபால் மாஅதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை சாதாரண தர பரீட்சையில் 688,573 பேர் தோற்றியிருந்த போதிலும் அனைத்து பாடங்களிலும் 9960 மாணவர்கள் ஏ சித்தியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tamilosai

இலங்கையின் கறுப்புத் தேயிலைக்கு சீனாவில் அதிகக் கேள்வி நிலவுகிறது...!

இலங்கையின் கறுப்புத் தேயிலைக்கு சீனாவில் அதிகக் கேள்வி நிலவுவதாக தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலையின் தரம் மற்றும் குறைந்தளவான கிருமிநாசினி பயன்பாடு ஆகியன அதிகக் கேள்வி நிலவுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு இந்த ஆண்டு இரட்டிப்பாகும் சாத்தியம் உள்ளதென தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Tamilosai

புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தீர்மானம்...!

நாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

Sunday, April 1, 2018

Tamilosai

எளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

ர்ப்ப காலத்தில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அந்த வகையில், கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறைகளைச் சொல்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

நட்ஸ் அவசியம்! 

 பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகள், உலர்திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இவற்றில் அதிக அளவில் புரோட்டீன், மினரல் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

பூண்டு மற்றும் மஞ்சள்தூளைத் தவிர்க்காதீர்! 

 உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன்கொண்டது, பூண்டு. இதில் உள்ள அலிசின் (Allicin), கிருமித்தொற்றால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவும். மஞ்சள்தூளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் தன்மைகள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே, தினசரி உணவில் இவற்றைப் பயன்படுத்துவது தாய் - சேய் நலம் காக்கும். 

ஹைட்ரேஷன் வேண்டும்! 

 கர்ப்பமாக இருக்கும்போது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். எனவே, நீர்ச்சத்து அதிகம் இருக்கும் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

 மஞ்சள், பச்சை நிறக் காய்களை அதிக அளவில் உணவில் பயன்படுத்த வேண்டும். எலும்புகள் உறுதியாக இருக்க உதவும் சூரிய ஒளி, பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களிலிருந்து வைட்டமின் டி  கிடைக்கிறது. பால், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி அதிகமுள்ள மீன், காளான் போன்றவற்றை உண்ணலாம். கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

எளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

நித்யஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்

வெஜிடபிள்ஸ் தேவை! 

 மஞ்சள், பச்சை நிறக் காய்களை அதிக அளவில் உணவில் பயன்படுத்த வேண்டும். எலும்புகள் உறுதியாக இருக்க உதவும் சூரிய ஒளி, பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களிலிருந்து வைட்டமின் டி  கிடைக்கிறது. பால், சீஸ், பனீர் உட்பட சில உணவுகளாலும் வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி அதிகமுள்ள மீன், காளான் போன்றவற்றை உண்ணலாம். கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி அவசியம்! 

 குழந்தைக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதிகமாக உடற்பயிற்சி செய்யமுடியவில்லை என்றாலும், காலையும் மாலையும் மிதமான  நடைப்பயிற்சி மேற்கொள்வது பலன் தரும்.

ஆழ்ந்த உறக்கம் நலம்! 

 இரவில் ஆழ்ந்து உறங்குவது தாய்க்கு மட்டுமன்றி, குழந்தைக்கும் அதிக நன்மையைத் தரும். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

- வெ.வித்யா காயத்ரி