Our Feeds
Showing posts with label Local. Show all posts
Showing posts with label Local. Show all posts

Tuesday, January 7, 2025

jazeem

ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சி!

 நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(07) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 289.72 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது இன்றையதினம் 291.32 ரூபாவாக சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், நேற்றையதினம் 298.41 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின்  விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.92 ரூபாவாக அதிகரித்துள்ளது

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.13 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 377 .21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி! ஒரே நாளில் பாரிய பின்னடைவு | Today Dollar Rate In Sri Lanka

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.65 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 313 .20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.80 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.17 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 189.63 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

Wednesday, December 27, 2023

jazeem

‘முடிந்தவரை முகக்கவசம் அணியுங்கள்’...!!



இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தம்பதீவா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயோஃபில்ம் மாதிரிகள் எடுக்கப்பட்டு இந்த நாட்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாக நாட்டின் கொவிட் தொடர்பான உண்மைகளை விளக்கும் நிபுணர் வைத்தியர் ரோஹித முதுகல தெரிவித்திருந்தார்.

புதிய வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் இப்போது குளிர் எதிர்வினை போன்ற ஒரு சிறிய நோயின் வடிவத்தில் தோன்றுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொவிட் மரபணு பகுப்பாய்வின் இறுதி சோதனையில் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Monday, April 9, 2018

Tamilosai

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிப்பு...!



2017 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பாடசாலை விண்ணப்பதாரிகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கு இம்மாதம் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தில் நிலவும் தொழினுட்ப கோளாறு காரணமாக தபால் மாஅதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை சாதாரண தர பரீட்சையில் 688,573 பேர் தோற்றியிருந்த போதிலும் அனைத்து பாடங்களிலும் 9960 மாணவர்கள் ஏ சித்தியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tamilosai

இலங்கையின் கறுப்புத் தேயிலைக்கு சீனாவில் அதிகக் கேள்வி நிலவுகிறது...!



இலங்கையின் கறுப்புத் தேயிலைக்கு சீனாவில் அதிகக் கேள்வி நிலவுவதாக தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலையின் தரம் மற்றும் குறைந்தளவான கிருமிநாசினி பயன்பாடு ஆகியன அதிகக் கேள்வி நிலவுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு இந்த ஆண்டு இரட்டிப்பாகும் சாத்தியம் உள்ளதென தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Tamilosai

புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க தீர்மானம்...!



நாட்டின் மின்சார தேவையை கருத்திற் கொண்டு புதிதாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

Sunday, April 1, 2018

Tamilosai

இலங்கையில் அமுலாகிறது உள்நாட்டு இறைவரி புதிய சட்டம்!


இலங்கையின் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் (New Inland Revenue Act) இன்று முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சட்டமானது, வரி செலுத்தக்கூடியவர்களுக்கு கூடுதலான அழுத்தத்தை ஏற்படுத்தி குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களால் எதிர்கொள்ளக்கூடிய வரிச் சுமையை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக நாட்டின் வருமானம் வீழ்ச்சி கண்டிருந்தது என்றும் இதனால் கூடுதலான வட்டியின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களினால் கடன்களைப் பெற்று அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்த அவர், இலங்கையின் வருமானமும் அதிகரித்தபோதிலும், அதற்கு அமைவாக வரி மூலமான வருமானம் சமீப காலத்தில் அதிகரிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வரிமூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது என்றும் நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
”தற்பொழுது 80சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும். 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.” என்றார்.
Tamilosai

பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று விஷேட பேச்சுவார்த்தை…

உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம், பல்கலைக்கழக பணியாளர்கள் சபை கூட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(02) விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக தமது அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்க குழுவின் இணைத் தலைவர் எட்வேர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர், தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூட்டம் இன்று(02) இடம்பெறும். அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது தமது தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Tamilosai

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழப்பு…



தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் இன்று(02) அதிகாலை, முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Tamilosai

நாட்டின் எதிர்கால ஆட்சி குறித்து கோட்டபாய சலனம் .


தற்போதைய அரசியல் நெருக்கடியான நிலையில் ஸ்தம்பித்துள்ள இலங்கை
உலக வல்லரசு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை எந்த வளர்ச்சியினையும் அடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டியில் நேற்று(29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டின் நிர்வாகம் சரிந்துள்ளது. திறமையானவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. ஒழுங்கற்ற முகாமைத்துவத்தால் நிர்வாக அமைப்பு பாரியளவு சரிவடைந்துள்ளது..” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Saturday, March 24, 2018

Tamilosai

சிவில் விமானசேவைக்கு இன்று முதல் திறப்பு...!



மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் சிவில் விமான சேவைகள் அதி­கார சபை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து விமான சேவைகள் மற்றும் சேவை நட­வ­டிக்­கை­களை இன்று 25 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஆரம்­பிக்க விமான நிலை­யங்கள் மற்றும் விமான சேவைகள் நிறு­வனம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.


மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில் விமான சேவைகள் திணைக்­க­ளத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. யுத்தம் கார­ண­மாக கடந்த 25 வருட கால­மாக இந்த விமான நிலையம் இரா­ணுவ மற்றும் விமா­னப்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.


நாட்டில் தற்­போது சுமுக நிலை ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் உள்­நாட்டு வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களின் வச­தியை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்­புக்கு விமான சேவைகளை நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
Tamilosai

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு...!


வௌிநாட்டு பணப்பெறுமதிக்கு அமைய நாட்டின் நாணயப்பெறுமதி குறைவடைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு கிழமைகளில் வாகனங்களின் விலை 5 வீதமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் கூறியுள்ளார்.

சாதாரண வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamilosai

டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்தது லங்கா IOC



லங்கா IOC நிறுவனம் நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாவாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், லங்கா IOC நிறுவனத்தின் ஒரு லிட்டர் பெட்ரோல் 126 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுப்பர் டீசல், சுப்பர் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என லங்கா IOC நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் அக்ரவால் தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 18 ரூபா நட்டம் ஏற்பட்ட போதிலும், டீசலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
jazeem

அதிவேக வீதியின் கட்டுமானப் பொருட்கள் திருட்டு: சீன பிரஜை உள்ளிட்ட இருவர் கைது...!



மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதியின் கட்டுமானப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜையொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 7000 கிலோகிராம் இரும்புத்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
jazeem

பலவந்தமாக கௌரவம் பெற முயற்சிக்கும் கொழும்பு அரசியல்வாதிகள்...!



கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு வலயத்திலுள்ள மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் நடைபெறும் விசேட நிகழ்வுகள், திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தன் பின்னர் அரச அதிகாரியென்ற வகையில், அதிபர்கள் அவர்களுக்கு கௌரவமளிப்பது கட்டாயமாக முன்னெடுக்கப்பட ​வேண்டிய விடயம் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்துடன், கொழும்பு வலயத்திலுள்ள மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

நௌபர் பௌசி, ஜயந்த டி சில்வா, மொஹமட் பைராஸ், அநுராத விமலரத்ன, அர்ஷாட் நிசாம்தீன், மொஹமட் பாயிஸ், எஸ்.குகவரதன், கே.டீ. குருசாமி, மொஹமட் அக்ரம், சுசில் கிந்தெல்பிட்டிய, சுனில் வட்டகல, ஹெக்டர் பெத்மகே ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கொழும்பு வலய அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், இவர்களின் பெயர்களை கொழும்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளடக்கியுள்ளார்.

அரசியல்வாதிகள் கௌரவத்திற்கு உரியவர்களாயின், அவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு எவரும் பின்வாங்கப்போவதில்லை.

எனினும், இவ்வாறு பலவந்தமாக கௌரவம் பெற முயற்சிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமல்லவா?
jazeem

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்க திட்டம்!



வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பிலான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்கான புதிய முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்லது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அடையாள ஆவணங்கள், சத்தியக்கடதாசிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறைமையை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் உயிரிழந்த நபரின் உறவினர்கள், சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அல்லது வெளிநாட்டில் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதனை அங்கீகரிப்பதற்கு குறித்த ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எனினும், புதிய முறைமையின் கீழ் உயிரிழந்த நபரின் உறவினர்கள் தேவையான ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர் அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த திட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்துவதற்காக, அனைத்து பிரதேச செயலாளர்களையும் அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jazeem

பால்மா விலையும் உயர்வு???



குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மா கிலோ ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு அனுமதி வழங்கியள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் டீ. ஜீவானந்த தெரிவித்தார்.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக இலங்கையில் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என பால்மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் வைத்த கோரிக்கையை வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் நுகர்வோர் அதிகார சபை முன்வைத்தது.

குறித் கோரிக்கையை ஆராய்ந்த வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு குழந்தைகள் பால்மா தவிர்த்து ஏனைய அனைத்து பால்மாக்களின் கிலோ கிராம் ஒன்றின் விலையை 80 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் வாரங்களில் வெளியிட முடியும் என நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
jazeem

டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்தது லங்கா IOC



லங்கா IOC நிறுவனம் நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசல் 5 ரூபாவாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், லங்கா IOC நிறுவனத்தின் ஒரு லிட்டர் பெட்ரோல் 126 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுப்பர் டீசல், சுப்பர் பெட்ரோலின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என லங்கா IOC நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் அக்ரவால் தெரிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 18 ரூபா நட்டம் ஏற்பட்ட போதிலும், டீசலை 5 ரூபாவால் மாத்திரம் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.