Our Feeds

Saturday, March 24, 2018

jazeem

அதிவேக வீதியின் கட்டுமானப் பொருட்கள் திருட்டு: சீன பிரஜை உள்ளிட்ட இருவர் கைது...!



மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதியின் கட்டுமானப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜையொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், பொருட்களைக் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 7000 கிலோகிராம் இரும்புத்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »