ஓஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானுடன் முதன்முறையாக இணைகிறார் இயக்குநர் மிஷ்கின்.
இசையுலகைப் பொருத்தவரை ஓஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு உலகளாவிய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு வருகிறார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62 ’, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்க சிவந்த வானம், ராஜுவ் மேனன் இயக்கத்தில் தயாராகும் சர்வம் தாள மயம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் திரையுலகில் சித்திரம் பேசுதடி படத்திலிருந்து அண்மையில் இவரின் நடிப்பில் உருவான சவரக்கத்தி வரை ஒரே பாணியிலான திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு கோணத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குநர் மிஷ்கின்.
இசைஞானம் மிக்க இவர் இசைஞானி இளையராஜா, இளம் இசையமைப்பாளர் ஆரோல் கொரேலி ஆகியோரைக் கடந்து முதன்முறையாக ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறார். இதனாலேயே இப்படத்தின் இசை குறித்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
மிஷ்கின் இயக்கவிருக்கும் இந்த படத்தில் சாந்தனு, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

