மியாமி டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் சிமோனா ஹலெப்புடன் மோதிய பிரான்ஸ் வீராங்கனை டுடின் தோல்விகண்டார்.
இப் போட்டியில் வெற்றிபெற்ற சிமோனா 3ஆ-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மியாமி டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோமேனிய வீராங்கனை சிமோனா ஹலெப்பை பிரான்ஸ் வீராங்கனை டுடின் எதிர்கொண்டார்.
இப் போட்டியில் 3-–6, 6–-3, 7–-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை டுடின்னை வீழ்த்தி 3ஆ-வது சுற்றுக்கு சிமோனா தகுதி பெற்றார்.
மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் 3–-6, 2–-6 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார். கடந்த வாரம் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் தொடரில் 3ஆ-வது சுற்றுவரை இவர் முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.