இன்றைய திகதியில் அலுவலகத்திற்கு சென்றாலோ அல்லது விற்பனை நிலையங்களில் பணியாற்றினாலோ கணினியில்லாமல் எதுவுமில்லை. அதனால் கணினி திரையை பார்த்துக்கொண்டே பணியாற்றவேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி மற்றும் தொலைபேசியுடன் பொழுதை கழிக்கின்றனர். இதனால் கண்களை பராமரிப்பதில் போதிய கவனமின்மை உருவாகிறது. இதனால் கண்களின் ஆரோக்கியம் கெடுகிறது. வறண்ட கண்கள், பார்வை திறன் குறைவு, கண்களில் இரத்த நாளங்களின் செயல்பாட்டில் சமசீரற்றத்தன்மை போன்ற பல விடயங்கள் நடைபெறுகின்றன.
அத்துடன் கண்கள் சோர்வடைந்துவிட்டால் அவை கண்களின் புறப்பகுதியையும் தாக்கி, அப்பகுதியை கருமையடையவைத்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அத்துடன் சோர்வான கண்கள் விரைவில் முதுமையான தோற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அதனை பலரும் தவிர்க்க விரும்புகிறார்கள்.
இதனை எளிய முறையில் உணவின் மூலமாகவே தவிர்க்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவர்களின் பட்டியலில், மீன்களில் சல்மான் மீன், சூரை மீன் எனப்படும் துனா மீன், பயறு, வேர்க்கடலை, முந்திரி போன்ற பருப்பு வகைகள், ஆளி விதை, சணல் விதை போன்ற விதைகள், எலுமிச்சை, ஓரஞ்சு, திராட்டை என சிட்ரஸ் அமிலங்கள் அதிகமுள்ள பழங்கள், பசலை கீரை போன்ற கீரைகள், விற்றமின் ஏ சத்து அதிமுள்ள கேரட் காய்கறி, பீட்ரூட், மாட்டிறைச்சி, முட்டை, குடிநீர் ஆகிய உணவு வகைகளை சரிசமவிகிதமாக எடுத்துக் கொண்டால் கண்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
டொக்டர் அகர்வால்.